பட்டுப்புழு வளர்ப்பு - திட்டங்கள்

2008 – 09 ஆம் ஆண்டில் மேற்குதொடர்ச்சிமலை மேம்பாட்டுத் திட்டம், மலைப்பிரதேசங்கள் மேம்பாட்டுத் திட்டம், மேம்பாட்டு ஊக்கத் திட்டம், பகுதி – II போன்ற மேம்பாட்டுத் திட்டங்கள் மத்திய பட்டுப்பூச்சி நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டன.

  1. அதிக மகசூல் தரும் முசுக்கொட்டை இரகங்களை நடுவதற்காக
  2. பட்டுப் புழு வளர்ப்பு பற்றிய பயிற்சியை விவசாயிகளுக்கு அளித்தல்
  3. முசுக்கொட்டை வயலில் சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க
  4. தனி வளர்ப்பு அறை அமைத்தல்
  5. மேம்படுத்தப்பட்ட பட்டுப்புழு வளர்ப்புக்கான கருவிகளைப் பெறுதல்
  6. இளம்புழு வளர்ப்பு மையங்களை அமைத்தல்
  7. தரமான தொற்று நீக்கிகளை வழங்குதல்
  8. பட்டு நூல்நூற்பு நிலையங்கள் அமைத்தல்

2008 – 09 ஆம் ஆண்டு பல திட்டங்களில் 9518 விவசாயிகள் பயன்பெறுவதற்காக ரூ. 1500 இலட்சங்கள் நிதி அளிக்கப்பட்டுள்ளது.

மேம்பாட்டு ஊக்கத் திட்டம்
பட்டுப் புழு வளர்ப்பு மற்றும் பட்டு நூல் தொழிற்சாலைகளின் மேம்பாட்டிற்காக, மத்திய பட்டுநூல் வாரியம், மாநிலங்களில் மேம்பாட்டு ஊக்கத்திட்டங்கள் சிறப்பாக செயல்பட உதவி செய்தது. அதிக மகசூல் தரும் இரகங்களைப் பயிரிடுதல், சொட்டு நீர்ப் பாசனம் அமைத்தல், தனி வளர்ப்புக் குடில் அமைத்தல், நவீன கருவிகள் வாங்குதல் போன்ற பலவற்றிற்கும் நிதியுதவி அளிக்கப்பட்டது.

மேற்கண்ட காரணங்களுக்காக 2007 – 08 ஆம் ஆண்டு சுமார் ரூ. 876.87 இலட்சம் நிதி மத்திய, மாநில அரசுகளால் அளிக்கப்பட்டது.

இந்நிதியைப் பெறத் தகுதியுள்ள விவசாயிகள்

அ.)  அதிக மகசூல் தரும் அக்குறிப்பிட்ட முசுக்கொட்டை இரகங்களை
குறைந்தது 1 ஏக்கரில் பயிரிட வேண்டும்.

ஆ.) வருடம் இருமுறை மகசூல் தரக்கூடிய 6 மாதங்களில் பட்டு இழைகளை
உற்பத்தி செய்யும் பட்டு இனங்களை வளர்க்க வேண்டும்.

இ.) விவசாயிகள் சொந்த நிலமும், போதுமான அளவு நீர்வளம் கொண்டவராகவும், பட்டுப்புழு வளர்ப்பில் ஓரளவு அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

ஈ) விண்ணப்ப படிவத்தை முறையாகப் பூர்த்தி செய்து, அந்தந்த பகுதிகளில் தொழில்நுட்ப சேவை மையத்தின் அரசு அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

வ. எண் திட்டம் ஓரலகுப் பரப்பின் விலை (ரூ)

நிதிப்பங்களிப்பு (ரூ)

மத்திய பட்டுப்புழு வாரியம் மாநிலம் பயனாளர்
1 முசுக் கொட்டைப் பயிர் செய்தல் (ஏக்கர்) 5,500 2000 1000 2500
2 சொட்டு நீர்ப் பாசனம்  அமைத்தல் (ஏக்கர்) 20,000 10,000 8000 5000
3 அ வளர்ப்புக் குடில் அமைத்தல் 1,00,000 25,000 25,000 50,000
3 ஆ வளர்ப்புக் கொட்டகை 55,000 13,750 13,750 27,500
3 இ ஆண்டுக்கு இரு முறை வளரும் பட்டுப்புழுக்கள் 1,50,000 37, 500 37, 500 75,000
4 நவீன வளர்ப்பு உபகரணங்கள் வாங்குதல் 40,000 20,000 10,000 10,000
5 இளம்புழு வளர்ப்புக் குடில் அமைத்தல் 3,45,000 86,250 86,250 1,72,500
6 தரமான தொற்று நீக்கிகள் அமைத்தல் 3000 750 750 1500 *
7 அ பட்டு நூற்பு நிலையங்கள் 2,50,000 1,25,000 62,500 62,500
7 ஆ பல முனை பட்டு நூல்  நூற்பு நிலையங்கள் 10,00,000 5,00,000 2,50,000 2,50,000

* தொற்று நீக்கிகளை பாதி விலை மட்டும் கொடுத்து விவசாயிகள் வாங்கிக் 
கொள்ளலாம்.

மத்திய பட்டுப்புழு வளர்ப்புத்துறை நிதிஅளித்தவுடன் மேற்கண்ட அனைத்து திட்ட செயல்முறை நடவடிக்கைகள் தொடங்கிவிடும். தமிழக அரசு பட்டுப்பூச்சி வளர்ப்பினை ஊக்குவிக்க ரூ. 119.40 இலட்சம் 2008 – 09 ஆம் ஆண்டு ஒதுக்கியுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலை மேம்பாட்டுத் திட்டம்

மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியில் பட்டுப்புழு வளர்ப்பை மேம்படுத்த அரசு 2008 – 09 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை மேம்பாட்டுத் திட்டத்திற்கென   ரூ. 20.25 இலட்சம் ஒதுக்கி செயல்படுத்தி வருகின்றது.

   
 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014